அமெரிக்காவில் ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் இதுவரை கொவிட் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந் நாட்டில் கொவிட்டினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த வாரம் கொவிட் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் 2.9% பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் 32 மாகாணங்களில் ஒமிக்ரோன் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.இந் நிலையில் தடுப்பூசிகளால் குறித்த வைரஸை முற்றாக கட்டுப்படுத்த முடியாது என மூத்த மருத்துவ விஞ்ஞானி என்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.