ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில், 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தாலிபான்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக முறையாக ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், ஹிஜாப் அணியாத பெண்களை வாகன சாரதிகள் அனுமதிக்கக்கூடாது எனவும், பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.