இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்  பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள்,...

அனோஜன் வழக்கு: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார்; இலங்கை சட்டக் குழு தீவிரம்!

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புச் செய்ததாகக் குற்றம்...

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...