பிரதமர் தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்

Date:

NEWS NOW:- கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டார்.

வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் அவர்கள் கௌரவ பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்.

வழிபாட்டில் கௌரவ பிரதமருடன் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி  லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன சாமிந்த கிரிந்திகொட, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...