மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் கிண்ணம் ரஃபேல் நடால் வசம்!

Date:

மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றுள்ளார்.உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொவிட் தொற்று  போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் . தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...