யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா

Date:

NEWS NOW:- யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா கலாநிதி சிதம்பரம் மோகன் தலைமையில் யாழ். நெல்லை ஆதினா மண்டபத்தில் (14) வெகு சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் செனரத் யாபா விசேட அதிதியாகவும் சர்வமதத் தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான வண.பிதா கலாநிதி எஸ்.சந்ரு பெர்னாண்டோ ஆசி உரை வழங்கினார்.
வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் இந்தியன் துணை தூதரகத்தின் பதில் தூதுவர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...