மெசெஞ்சரின் புதிய சேவை-மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

Date:

பேஸ்புக் சமூக ஊடக தளம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது.அப்போதுதான் பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (செட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், பேஸ்புக் உள்ளே சென்றால்தான் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதால் உடனடியாக பிரபலமாகவில்லை.

எனினும், 2009-இல் அறிதிறன் பேசியில் (ஸ்மாா்ட் போன்) இணையத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை அனைவரிடம் பிரபலமாகியது.

இதனால் 2014-இல் பேஸ்புக் நிறுவனமே வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியது. தற்போது வாட்ஸ்ஆப் இல்லாத அறிதிறன் பேசி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இந் நிலையில், ஃபேஸ்புக்கில் உள்ள சாட் சேவை மெசேஞ்சராக மாற்றம் கண்டு, வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ தொலைபேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சோ்க்கப்பட்டன.வாட்ஸ்ஆப்பிலுள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசேஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.

இந் நிலையில், நாம் ஒருவருக்கு தானாக அழியும் வகையிலான தகவலை அனுப்பினால் அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபா் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுத்தால், அது அனுப்பியவருக்கு குறுந்தகவலாக (நோட்டிபிகேஷன்) எச்சரித்திடும் புதிய சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பெற மெசேஞ்சரில் உள்ள ‘சீக்ரேட் கான்வா்ஷேசன்’ உள்ளே சென்று- ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ என்பதை தோ்வு செய்து விட்டால் போதும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும், அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப் போல் குறிப்பிட்ட தகவலைத் தோ்வு செய்து பதிலளிக்கும் வசதியும், மற்றவா்கள் பதிலளிப்பதற்காக பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும், அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்து கொள்ளவும், விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசெஞ்சா் அறிமுகம் செய்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...