Friday, November 13, 2026

தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஆளுமை கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் காலமானார்

1 min read · 3 reads
தினகரன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியரும் கம்மல்துறை வரலாறு நூலின் ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் (வயது 77) நேற்றுக் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13) நீர் கொழும்பு பெரிய முல்லை மையவாடியில் முற்பகல் 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தினபதி’, ‘சிந்தாமணி’ போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், ‘தினகரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தராகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளமான ‘நியூஸ்.எல்கே’ (news.lk) யில் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்து, தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர்.

‘தினபதி’ பத்திரிகையில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்த ‘இஸ்லாமிய பூங்கா’ பகுதியில் பொறுப்பாசிரியராகவும் இருந்து, அந்தப் பக்கத்தை மிகத் திறமையாகவும், துல்லியமாகவும் மேற்கொண்ட பெருமையும் இவரைச் சாரும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வாசகர்களின் நெஞ்சங்களில் அவர் நீங்காத இடம் பிடித்திருந்தார்.

அன்னார், கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவராகத் தனது இறுதி மூச்சு வரை இருந்து செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.