சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர்
நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத் தாக்குதலுக்கு al Shabaab என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13பேரில் ஒருவர் அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.
இந்த தாக்குதலில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் வருகிற 25 ஆம் திகதியுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.