தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக இன்று (19) நடைபெற்றுள்ளது.ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு நிலையங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும்,வாக்குப்பதிவு நிலையங்களில் ஏற்பட்ட கோளாறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல ஊர்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.மாலை 5 மணி வரை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.மாலை 5 மணிக்கு பின்னர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.