அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவதும், இறுதியுமான போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரொன் பின்ச், முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
போட்டியில் அதிகபடியாக மெத்யூ வேட் 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இலங்கை அணியின் பந்து வீச்சில் துஸ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்கள்.
இந் நிலையில், 155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கியுள்ளது.