(File Photo)
கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே பாதையில் பயணித்த (சி.டி.பி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முடியாத வகையில் வீதியை மறித்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், சி.டி.பி பஸ் சாரதியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சி.டி.பி பஸ்ஸில் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.
பயணிகளிடமிருந்து தப்பிக்க, அவர்கள் இருவரும் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதுடன் அவர்கள் பொலிஸாரார் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சி.டி.பி பஸ்ஸின் சாரதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.