‘இலங்கை, தற்காலிக நெருக்கடிகளை விரைவில் தீர்க்கும்’: சீனா நம்பிக்கை

Date:

தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

‘இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகள் மற்றும் ஒற்றுமையுடன், நாடு தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து இன்னும் பெரிய வளர்ச்சியைத் தழுவும் என்று நம்பப்படுகிறது’ என்று தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததிலிருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வை வெளிப்படுத்தி, பரஸ்பர ஆதரவை வழங்கி வருகின்றன.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது திறனை அனுமதிக்கும் வகையில் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...