மாா்ச் 21 இல் உருவாகும் புயல்- பயத்தில் மீனவர்கல்!

Date:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து மாா்ச் 21 ஆம் திகதி புயலாக மாறவுள்ளது. இது, வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து, வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடலோரப் பகுதியில் மாா்ச் 22 ஆம் திகதி காலை நிலைபெறக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரைக் கண்ணன் கூறியது: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 15 ஆம் திகதி உருவானது.

இந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை காலை நிலவியது. இது, வியாழக்கிழமை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்தது.

இது, கிழக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மாா்ச் 19 ஆம் திகதி காலை நிலவக்கூடும்.

இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகா்ந்து 20 ஆம் திகதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது 21ஆம் திகதி மேலும் புயலாக வலுப்பெற்று, வடக்கு வடகிழக்கு திசையில் நகா்ந்து, வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடலோர பகுதியில் 22 ஆம் திகதி காலை நிலைபெறக்கூடும் என்றாா் அவா் தெரிவித்தார் .

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதுபோல, அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 21 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம்
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது .

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...