புத்தசாசன அமைச்சினால் புத்தளத்தில், போதைப்பொருள் புனர்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

புத்தசாசன அமைச்சின் கீழ் புத்தளம் பெந்தகோஸ்து தேவாலயத்தில் போதைப்பொருள் புனர்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு திங்களன்று புத்தசாசன அமைச்சினால் போதைப்பொருள் புனர்வாழ்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் சகல மதங்களையும் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பில் சமய நிறுவனங்கின் பங்களிப்பு மிக முக்கியமாக இருப்பதால் சமயத் தலைவர்களுக்கு இது தொடர்பான விரிவான விளக்கமும் போதை ஒழிப்பு சம்பந்தமான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

சமயத் தலைவர்களான, புத்தியாகம ரதன ஹிமி, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப், சிவஸ்ரீ வெங்கடராம குருக்கள், ஆகியோர் இந்த நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்
இதேவேளை கருத்தரங்கு நிகழ்வில் வரவேற்புரையை பெந்தகோஸ்து தேவாலய பிரதான மதகுரு ரத்ன மலர் சகோதரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...