2015 ஆம் ஆண்டு கஹவத்தை கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான ஆதாரம் இல்லை என பிரேமலால் ஜயசேகர விடுதலை!

Date:

இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவரை கஹவத்தை கொலை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை 31,ஆம் திகதியன்று கஹவத்த பிரதேசத்தில் தேர்தல் மேடையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சாந்த தொடம்கொடவை கொலை செய்த குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகர மற்றும் இருவர் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன ஆகியோர் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் இன்று காலை குறித்த அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதற்கமைய நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, சம்பவம் இடம்பெற்ற போது குற்றம் சாட்டப்பட்ட மூவரும் துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார்.

இதன் மூலம், இரத்தினபுரி மேல் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி காலை கஹவத்தையில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான தேர்தல் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த அரசியல் ஆதரவாளர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பெல்மடுல்ல நீதவான் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தார்.

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன ஆகியோர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதே ஆண்டில் டிசம்பர் மாதம் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜூலை, 2020 இல், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜெயசேகர மற்றும் மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...