வீடு மற்றும் முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...