பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதையடுத்து அவர்களை பாராளுமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் பணித்தார்.
அதன் பிரகாரம், அவர்களை அப்புறப்படுத்த சார்ஜன்ட் நடவடிக்கை எடுத்தார்.
இரு எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பணிப்புரை விடுத்தார்
அதேவேளை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறும்வரை சபாநாயகர் சபைக்கு வரமாட்டார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.