அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிலரே ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றசம்சாட்டியுள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது ‘ஜே.வி.பி உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டதை நாங்கள் அறிவோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜே.வி.பியின் முன்னாள் தேசியப்பட்டியல் அரசியல்வாதி ஒருவர் உடனிருந்தமைக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைதியான போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், கூட்டத்தை கலைக்க அரசாங்கம் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
‘வன்முறையால் யாராவது இறந்துவிடுவார்கள் என்று போராட்டத்தை தூண்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்னும் அமைச்சர் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார்.