எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாட்டில் பேக்கரி உற்பத்தி பாரிய சரிவு!

Date:

எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் சூழல் மற்றும் சர்வதேச எரிவாயு விநியோகச் சங்கிலியின் சரிவு காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பேக்கரிகள், உணவகங்களின் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதனால் மக்கள் அத்தியவசிய உணவுகள் இன்மை காரணமாக பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பில் 70 வீத வீழ்ச்சி நிலையாகும். இந் நிலையினால் நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.

இருப்பினும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில நகர்ப்புறங்களில் பாண், உள்ளிட்ட சில பொருட்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் நெருக்கடி நிலை தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும் தொழிற்சங்க தலைவர் குமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய பொருளாதார நிலையை சீர்செய்ய அரசு மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என்பதுடன் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்டவரிசைகளில் காத்துநிற்பது அதற்கு ஒரு உதாரணமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் காணப்படுவதாகவும் தமது சேவையை இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு தமக்கு கவலையளிப்பதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பேக்கரிகள் மூடப்படுவதினால் தாம் தமது தொழிலை இழந்து சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கு கூட போதியளவு பணம் இல்லாமல் உள்ளதாக சில தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் அளித்த வாக்குகளின பலனாக தற்போது வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, பால் மா இல்லை, இரவு நேரத்தில் மின்சாரம் இல்லை, பகலில் பொருட்களை வாங்க வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது மின்சாரம் தடை ஏற்படாது என தெரிவித்து சில மணித்தியாலங்களில் மின்சார தடை ஏற்படுகின்றது.

இந்த அரசாங்கத்தால் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால் உரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பதவி விலக வேண்டும்.

அதுதான் நாட்டுக்கு செய்யக்கூடிய சிறந்த விடயம். தற்போது இவர்கள் நம் நாட்டுக்கு கேடு விளைவித்து வருகின்றனர். மக்களை விடுவிக்குமாறு கோருகிறோம். இது வருத்தமளிக்கிறது’ என தொழிற்சங்க தலைவர் குமார நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ‘எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். சிறு தொழில்களை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். சில நாட்களின் பின்னர் இன்று பேக்கரியை திறந்தேன்.

மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நேற்று வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்ட எரிவாயு ஒருநாளைக்கு மாத்திரமே போதுமானது’ என பேக்கரி உரிமையாளர் சமீர விதானகே தெரிவித்தார்.

சுமார் ஒரு வாரமாக எங்களிடம் எரிவாயு இல்லை, பல சிரமங்களுக்கு மத்தியில் நாங்கள் எங்கள் தொழிலை செய்கிறோம். சந்தையில் எரிவாயு இல்லை. இருந்தாலும் அதிக தொகைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று பேக்கரி தொழிலாளி தில்ஷன் குருப்பு கூறினார்.

அதேநேரம், ‘எரிவாயு தட்டுப்பாட்டால் எங்கள் பேக்கரி ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. நாங்கள் வேலை இழந்தோம். வீட்டிற்குச் செல்லக்கூட எங்களிடம் பணம் இல்லை.’ பேக்கரி தொழிலாளர் நியாஸ் அமீன் கூறினார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...