கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது.
மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் போராட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தி அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்து வழங்க முன்வந்தனர்.
நேற்றிரவு (11) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.