தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம்-கிண்ணியாவில் மேற்கொண்டார்.
இலங்கையின் மிக நீளமான கடல் மேல்பாலம் மீது ஏறி நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது கிண்ணியா நகர சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்தார்.
பொது மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் மதிப்பளித்து Gota Go Home, Bazil Go Home போன்ற வாசகங்களை பதாகைகளில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.