கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு: விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

Date:

(File Photo)
கொழும்பு காலி முகத்திடலில் இன்று இளைஞர்- யுவதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறையினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளும் தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...