தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு வித்தியாசமான போராட்டமாகவே காணப்பட்டது. போராட்டத்தின்போது முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கான நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் தங்களது நோன்பை திறந்ததும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: அல்ஹாஜ் இம்ரான் ரஜாப்தீன்.