‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Date:

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)

சிம்மாசன உரை

சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது

அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது

ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாவிப் பிராணிகள்
அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும்
நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

காடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகள்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிநதிராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது

நேற்று நள்ளிரவில்
மற்றொரு காட்டுக்குத்
தீயிடப்பட்டது

வெக்கை பொறுக்க முடியாத
பிராணிகளதும் பறவைகளதும்
அவலக் குரல்
ஆகாயம் வரை ஒலித்தது…!

Popular

More like this
Related

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு!

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று...

2,100 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு

டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து,...

மீண்டும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்திற்கு தெரிவு: டயனாவின் இடத்திற்கு நியமிக்க சஜித் முடிவு

டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது எனும் உயர் நீதிமன்றத்...