இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒவ்வொரு நொடியும், நாடு முக்கிய டொலர்களை இழந்து வருவதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்க மறுப்பதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
30 ஆண்டுகளாக நாட்டைப் பாதித்த போரை தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்தது என்றும், எரிவாயு மற்றும் எரிபொருளை வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் மக்களை ஒருபோதும் கைவிட விரும்பவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
மக்கள் படும் துன்பங்களை தாம் உணர்ந்துள்ளதாகவும்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து தற்போதைய சிரமங்களை சமாளிக்கும் முயற்சிகளில் எந்தக் கல்லையும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
225 எம்.பி.க்களையும் நிராகரிக்கும் கோஷம் குறித்து கருத்து தெரிவித்த அவர்இ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலின் விளைவுகளை நிரூபிக்க வரலாறு நிரம்பியுள்ளது என்றார்.
இதுபோன்ற கொடூரமான வன்முறை காலகட்டத்திற்கு நாட்டை மீண்டும் இழுத்துச் செல்ல வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
88/89 காலகட்டத்தில் ஜனநாயகத்தை நிராகரித்ததன் காரணமாக நிறைய இரத்தம் சிந்தப்பட்டதாக அவர் கூறினார் .
‘அந்த நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் விளைவாக சுமார் 60இ000 இளம் உயிர்கள் பலியாகியுள்ளன ‘ என்று அவர் கூறினார்.
அவர்இ ‘உங்கள் கைகளில் தேசியக் கொடிகள் படபடப்பதை நான் காண்கிறேன். முப்படையினரும் செய்த மகத்தான தியாகத்தால் நீங்கள் அந்த சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள்’ என்று பிரதமர் கூறினார்.
மேலும் நீங்கள் அனைவரும் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதுமான அவமானங்களை இன்று நான் சந்திக்கிறேன்.
அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். எனினும், நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள். இன்று நீங்கள் சுதந்திரமாக பயமில்லாமல் வீதிகளில் பயணிப்பதும், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதும் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியமையினாலேயே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேபோன்று கோவிட் தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றுவதற்கும் இந்த இராணுவ வீரர்கள் போரடினார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
பிள்ளைகளே, உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.