பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரனே இவ்வாறு பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.