இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் மூன்று மாத காலத்திற்கு தான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
இந்நிலையில் இலங்கை நாடு ஸ்திர நிலைமையை அடைந்ததன் பின்னர் தான் சபைக்கு வருகைத் தந்து அமர்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.