கொழும்பு சிறைச்சாலையின் வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையினால் இரண்டாவது வருடமாகவும் சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விசேடமாக 30 நாளும் நோன்பு நோற்பதற்காகவும் மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வுகளுக்காகவும் அதற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த குறித்த உணவுத் தொகையினை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் டி. ரஜீவ எஸ். சில்வாவிடம் உத்தியோகபூர்மாக கையளித்தார்.
இதன் போது பெப்ரல் அமைப்பின் உப தலைவரும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் கே. என். டீன் மற்றும் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அதிகாரி மகேஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
30 நாட்களும் சஹர் வேளையில் நோன்பு பிடிப்பதற்கான உணவுப் பொருட்களுடன் 30 நாட்களும் நோன்பு திறப்பதற்கான கஞ்சி,பெருநாள் உணவு உட்பட சமைப்பதற்கு தேவையான ஏனைய சகல உணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.