(File Photo)
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த போராட்டக்காரர்கள் அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய கீழே இறங்க வேண்டும் என்றும் அவரது பணம் திரும்ப வரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் கூறினார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள் இலங்கை மக்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.
இதேவேளை உலகெங்கும் வாழும் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.