(File Photo)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இரவு நடைபெறவிருக்கும் கலந்துரையாடலை புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
சுயேட்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவை அரசாங்கத்திற்கு மாற்றியமைத்ததற்கும் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து சுயேட்சைக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் சுயாதீன பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்சவுக்கும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலைப் புறக்கணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.