ரம்புக்கனை சம்பவம்: முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கியதை சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்புக்கொண்டார்!

Date:

ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் பவுசருக்கு வைக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கன பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் வெள்ளிக்கிழமை நேற்று (ஏப்ரல் 22) கேகாலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது, சீதாவாக்கை பொலிஸ் பிரிவின் எஸ்.எஸ்.பி தலைமையிலான விசாரணைக் குழு, இதுவரை 51 பொதுமக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் குழுவினர் சமர்பித்தனர்.

குறித்த சம்பவத்தில் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த கேகாலை பொலிஸ் நிலையத்தினால் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் தலா 30 தோட்டாக்கள் கொண்ட நான்கு T-56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஆயுதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியுமா என நீதவான் வினவிய போது, குறித்த நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் பதிலளித்தனர்.

சமிந்த லக்ஷன் என்ற எதிர்ப்பாளரின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு தொடர்பான சாட்சியங்கள் பின்னர் சேகரிக்கப்பட்டன.

அதேவேளை நீதிமன்றில் உரையாற்றிய கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், எரிபொருள் பௌசரின் பாதையை மறித்து அதற்கு அருகில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

இரண்டு வாகனங்களுக்கும் தீ வைக்க முயற்சித்த போது இரண்டு எரிபொருள் பவுசர்களையும் பொலிஸார் பாதுகாத்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்காரர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைக்க முயன்றபோது, முதலில் பொலிஸாரை வானத்தை நோக்கி சுடுமாறும், பின்னர் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததால் பெரும் சேதத்தைத் தடுக்க முழங்காலுக்குக் கீழே சுடுமாறும் அவர் கட்டளையிட்டார்.

இந்த வழக்கில் மூத்த அதிகாரி என்ற முறையில் வழங்கிய உத்தரவுகள் சட்டபூர்வமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) நாடளாவிய ரீதியில் நடைபெறும் எந்தவொரு போராட்டத்திலும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் மரணம் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...