சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Date:

பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தென் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், தென் மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஶ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...