தமிழகத்தை சேர்ந்த சிறுமி தனது சேமிப்பு பணத்தை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கினார்!

Date:

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேமித்து வைத்த 4400ரூ. பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

குறித்த பணத்தை அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, இலங்கையர்கள் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதால் தனது உண்டியல் பணத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 (இந்திய ரூபாய்) பணத்தினை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...