பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.
நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.
அதேவேளை உறுப்பினர்கள் நம்பிக்கையில்ல பிரேரணை மீது விவாதம் செய்வதற்கான திகதியை வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பதவி நீக்க பிரேரணைக்கு இல்லை என்றும் கூறினர்.