காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மல்வானையில் உள்ள வீடு ஒன்று இன்று மக்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்தை வீட்டை முற்றுகையிட்டு கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர்.
கொழும்பு அலரி
மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது பிரதேச மக்கள் வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதேவேளை பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த காணியில் மக்கள் வந்து வீடுகளை அமைத்து குடியேற வேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.