நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.
மாணவர்கள் கறுப்பு ஆடை மற்றும் சிவப்பு நிற துணியை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
‘அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!’. ‘வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.