மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான போராட்டங்கள் மீதான நேற்றைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டா கோ கம போராட்ட தளத்தில் விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்,
நேற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
சட்டத்தை அமுல்படுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஏனைய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சட்டத்தரணி சரித் கல்ஹேன தெரிவித்துள்ளார்.
31 நாட்களாக அமைதியாக இருந்த கோட்டா கோ கம மற்றும் மைனா கம போர்க்களம் மீது நேற்று பொதுஜன பெரமுனவின் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்கள் நடத்திய தாக்குதலால் நாடே கொந்தளிப்பில் உள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் எனக் கூறி அவருக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு வந்த மொட்டு அரசியல்வாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் தூண்டியது யார்?
இவ்வாறானவர்களை தூண்டிவிட முனைப்பு காட்டியவர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ஒருவர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற அரசியல்வாதிகளை மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வராமல் இருப்பது அனைவரின் பொறுப்பாகும்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தூண்டிய அரசியல்வாதிகளுக்கும் மேலே உள்ள அரசியல் அதிகாரிகளுக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டாமா?
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு நாட்டைக் கொளுத்தியதற்காக எப்போது கைது செய்யப்படுவார்?