எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மக்கள் அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் வன்முறைகள் மற்றும் பிரஜைகளுக்கு எதிரான பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருக்குமாறும் ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு ஆணைக்கு உட்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண இணக்கப்பாட்டின் ஊடாகவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.