முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜூன் 1ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காகவே மனித உரிமை ஆனைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்று முடிந்த பின்னரே மஹிந்தவின் வாக்கு மூலங்களை பெறுவோம் என ஆணைக்குழு
எனினும்,இதுவரை காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பெற்று முடிக்கவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.