ரயில் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணங்களையும், 14 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த சரக்கு, தபால் மற்றும் இதர கட்டணங்களையும் திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க கொள்கைக்கு அமைவாக இலங்கை புகையிரத திணைக்களம் சலுகைக் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையினால் திணைக்களத்திற்கு ஏற்படுகின்ற நட்டங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்வைத்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.