கொவிட்-19 காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இறப்புகள் அனைத்தும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே.
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும்.
கடந்த சில நாட்களாக, கொவிட் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இம்மாதத்தின் முதல் 06 நாட்களில் 787 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.