‘பசில் வருகையால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்’

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்க பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ மற்றும் உறுப்பினர் பெரேரா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்ததை ஐக்கிய மக்கள் சக்தி இன்று கேள்வி எழுப்பியது.

அதேநேரம், அவர்களை சபைக்கு வெளியே அனுப்புமாறும் பாராளுமன்றத்தில் கோரியது.

இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா, பொலிஸ் ஆணைக்குழுவை இனி எவ்வாறு சுயாதீன அமைப்பாக கருத முடியும்? எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும், பசில் ராஜபக்ஷவை வரவேற்க விமான நிலையத்தில் சந்திரா பெர்னாண்டோ மற்றும் எம்.பி. பெரேரா ஆகியோர் இருந்ததை நாங்கள் கவனித்தோம்.

பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமானதாக இருக்க வேண்டும். எனவே, பசிலை வரவேற்க அந்த உறுப்பினர்கள் எப்படி அங்கு இருக்க முடியும்?’ என்று நளின் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்றும், அவர் எம்.பி கூட இல்லை , எப்படி பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

மரிக்காருக்குக்கு பதிலளித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்சவின் வருகையால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பதற்றமடைந்துள்ளனர் மற்றும் பசிலுக்கு பயந்துள்ளனர். இதனால்தான் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்,” என்றார்.

Popular

More like this
Related

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...