வடமேற்கு துருக்கியில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Date:

துருக்கியின் இஸ்தான்புல் நகரம், தலைநகர் அங்காரா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேநிலையில் துருக்கியின் வடமேற்கு டஸஸ் மாகாணத்திலும் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு   ஏற்பட்ட நிலநடுக்கம், கோலியகா மாவட்டத்தில், டஸ்ஸிலிருந்து வடமேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம், தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இப்பகுதியில் 70 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து மக்கள் பலர் பீதியுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதுடன் அப்பகுதியில் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...