துருக்கியின் இஸ்தான்புல் நகரம், தலைநகர் அங்காரா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேநிலையில் துருக்கியின் வடமேற்கு டஸஸ் மாகாணத்திலும் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், கோலியகா மாவட்டத்தில், டஸ்ஸிலிருந்து வடமேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம், தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இப்பகுதியில் 70 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து மக்கள் பலர் பீதியுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதுடன் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
Videos show the impact of a magnitude 5.9 earthquake that has struck Türkiye’s northwestern Duzce province.
Tremors were felt in neighbouring cities, including Istanbul and Ankara pic.twitter.com/xZeAfJTYwz
— TRT World (@trtworld) November 23, 2022