மாத்தறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பிள்ளைகள் மதிய உணவை முடித்துவிட்டு மேசையில் சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கைகளை நாக்கினால் சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் கூறியதாக கூறப்படும் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்த சம்பவத்தை பாடசாலையின் ஊழியர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தென் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் தற்காலிகமாக மாத்தறை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.