தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று டிசம்பர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் 2894 வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த வருடம் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
மேலும் தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது. இதேவேளை, பரீட்சைக்கு முன்னதாக பிள்ளைகளை தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.