தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் அரசாங்க அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு அச்சிடப்படும்.
ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்குச் சீட்டின் அளவு குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச் சீட்டுகளை அச்சிட எடுக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கான செலவுகள் திருத்தப்படும் எனவும் அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்துடன் ஒப்பிடும் போது வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தால் செலவுகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும்...

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...