கேகாலை மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான பன்மைத்துவம் தொடர்பான வதிவிட செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 22, 23 ஆம் திகதிகளில் பேராதனை ரோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் மாவட்ட செயலாளர் 2 மேலதிக மாவட்ட செயலாளர் 2 உதவி மாவட்ட செயலாளர்கள் 22 பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி கணக்காளர் பணிப்பாளர் போன்ற உத்தியோகத்தர்கள் பலர் பங்குபற்றினர்.
இந்த நிகழ்வை PDF அமைப்பைச் சேர்ந்த நிஷாந்த கஸ்தூரி மற்றும் கேகாலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்தனர்.
மேலும் இந்த செயலமர்வில் வளவாளர்களாக உபுல் அபேரத்ன, ஜெஹான் பெரேரா, சிரேஷ்ட நிர்வாக அதிகாரி (ஓய்வு) வஜிர நாரம்பனாவ மற்றும் சமன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு குறித்து ஜெஹான் பெரேரா கலந்துரையாடினார்.
இதனையடுத்து உபுல் அபேரத்ன பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கம் பற்றிய கருத்தியல் கருத்துக்களை விவாதித்ததுடன், வஜிர நாரம்பன ஆன்மிக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பொது நிர்வாகக் கருத்துக்களைப் பயன்படுத்துவது பற்றி தெளிவுபடுத்தினார்.
அதேநேரம், நடைமுறைச் செயற்பாடுகள் உட்பட இலங்கையில் பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்புவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சமன் செனவிரத்ன, கலந்துரையாடினார்.
மொத்தம் 37 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த செயலமர்வில், பல பிரதேச செயலாளர்கள் தமது பணி வாழ்வில் இங்கு பேசப்பட்ட விடயங்களை எதிர்கொண்டதாகவும், அந்த சம்பவங்கள் மிகவும் முக்கியமானவை என நினைக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை, தற்போது சிறுபான்மை குழுக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென உணரப்படுகின்றது.
அதற்கான குறிப்பிட்ட முறையான வழிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இந்த செயலமர்வு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் NPCக்கு நன்றி என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.