விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி பத்தரமுல்லை – இசுருபாயவுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.